
இராஜாங்க அமைச்சர்களுக்காக 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அந்த வாகனங்கள் நீர் பவுசர்கள், அம்புலன்ஸ்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் வண்டிகள் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, தேர்தலை நடத்துவதற்கு பணமில்லாத நேரத்தில் அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.