
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்ஷு பாலமண்டலத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகளினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.