
கொழும்பில் ஆரம்பமாகவுள்ள 24வது விமானப்படை சைக்கிள் சவாரி மார்ச் 2 ஆம் திகதி தொடங்கி பந்தயம் மார்ச் 04 ஆம் திகதி அனுராதபுரத்தில் நிறைவடையும்.
மேலும், விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் பெண்களுக்கான பந்தயம் ஹபரன பிரதேசத்தில் இருந்து ஆரம்பமாகி அனுராதபுரத்தில் மார்ச் 04 ஆம் திகதி நிறைவடையும் என விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் தலைவர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர தெரிவித்தார்.
அத்தோடு, சகல நிலப்பரப்பு அம்சங்களுடனும் வீதிகளை மையப்படுத்தி இந்த சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் செயலாளர் நளின் ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.