
எதிர்காலத்தில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தோடு, இந்திய டெக்டோனிக் தகடுகள் நது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சென்டிமீட்டர் நகருவதாகவும் இதன் காரணமாக, இமயமலைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பினால் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று கலாநிதி என் பூர்ணச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “இமாச்சலத்திற்கும் மேற்கு நேபாளத்திற்கும் இடையே நில அதிர்வு இடைவெளி என்று அழைக்கப்படும் பகுதி உத்தரகண்ட் உட்பட எந்த நேரத்திலும் பூகம்பத்திற்கு ஆளாகளாம் என்றும் கலாநிதி என் பூர்ணச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பூகம்பங்களைக் கண்காணிக்க உத்தரகாண்ட் 18 நில அதிர்வு நிலையங்களைக் கொண்ட வலுவான வலையமைப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதினைத் தொடர்ந்து இதுவரை 45,000 பேருக்குமேல் உயிரிழந்துள்ளனர்.