
இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆஜராகி குறித்த தீர்மானத்தினை வெளியிட்டார்.