
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (23) இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மேலும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசித் சமிர பரணவிதான மற்றும் சாமிக்க ஹர்ஷனி சில்வா ஆகியோர் ஒழுக்காற்று நடவடிக்கையின்றி அநீதியான முறையில் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க தயாராகி வருவதாக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பரிசீலித்த கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே, எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.