
விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை வழங்காவிட்டால் அடுத்த வாரம் முதல் தொழில் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்கள் இருப்பதாக அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அத்தோடு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிலுள்ள 120 க்கும் மேற்பட்ட முன்னணி இளம் தொழில்முயற்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இளம் இலங்கை தொழில்முனைவோர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் புதியவரி சுமையை குறைக்குமாறு இலங்கை இளம் தொழில்முனைவோர் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.