
சிறுமிக்கு எச் 5 என் 1 பறவைக் காய்ச்சலால் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக ம்போடியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு அதிக காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக கம்போடியாவில் பதிவான முதல் பறவைக் காய்ச்சல் இறப்பு இதுவாகும் என்பதோடு சிறுமியின் தந்தை உட்பட மேலும் 11 பேர் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்போடியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, வியாழனன்று, சுகாதார அமைச்சர் Mam Bunheng, கம்போடியாவில் H5N1 வைரஸ் ஒரு மனிதனைப் பாதித்திருப்பது 2014-க்குப் பிறகு முதன்முறையாக உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிட விடையமாகும்.
மேலும், பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் கிராமத்திற்கு அருகில் இறந்த பல பறவைகளின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளதோடு நோய்வாய்ப்பட்ட பறவைகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, கம்போடியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியது. முந்தைய தசாப்தத்தில், H5N1 தொற்று 56 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 37 பேர் இறந்துள்ளனர் மேலும் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது அரிதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட கோழி உட்பட பறவைகளுடன் வேலை செய்பவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 2021 ஆம் ஆண்டு முதல் சீனா, இந்தியா, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 08 பேர் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் 2021 முதல், ஒரு புதிய பறவைக் காய்ச்சல் வைரஸ் உலகம் முழுவதும் பறவைகள் மத்தியில் பரவதக்கவும் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் வகை, மின்க்ஸ் மற்றும் நீர்நாய் போன்ற பாலூட்டிகளையும் பாதித்துள்ளதோடு இந்த வைரஸை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.