
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரிய குற்றவாளி ஒருவர் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நிலையத் தளபதி உட்பட மேலும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சந்தர்ப்பத்தின் போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்க்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி,வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடற்படையில் இருந்து தப்பியோடிய தாம் 9 கொலைகளை செய்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதோடு சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்படி, களுத்துறை துவா கோவில் வீதியைச் சேர்ந்த ரவிந்து வர்ண ரங்க என்ற 28 வயதுடைய நபரே பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.