
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கொள்ளுப்பிட்டி, கொம்பஞ்சவீதிய மற்றும் கோட்டை பொலிஸ் பிரிவுகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்குள் பல்வேறு வழித்தடங்களில் பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் தற்போதைய விதிகளின் பாடிய நீதிமன்றம் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதன்படி, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கும் மற்றும் கலந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட 26 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இன்று பிற்பகல் 01.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையான காலப்பகுதியில், கோட்டை பொலிஸ் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள வீதிகள் தடை செய்யப்படாமலும், பயணிக்கும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி மவுத் சதுக்கம் ஆகிய இடங்கள் நீதிமன்ற உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் செயல்களைச் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த உத்தரவை மீறுவது இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்ற உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.