
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சீனா கொண்டு வந்த பிரேரணைக்கு பிரான்ஸும் ஆதரவு அளித்து வருகின்றது.
அதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சீனாவுக்கான விஜயத்திற்கு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த 24ம் திகதி உக்ரைனில் போர் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்காக உக்ரைனையும் ரஷ்யாவையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர சீனா தயாராகி வருவதாகவும் அதற்கு உக்ரைனும் ரஷ்யாவும் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சீனா அதிபரை சந்திக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.