பப்புவா நியூ கினியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரித்தானியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதன்பய, மாகாணத்தின் தலைநகரான கிம்பேவில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளதுடன், நிலநடுக்கத்தால் பாரிய சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.