
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று 04 வருடங்கள் நிறைவடையும் வரை நாட்டின் நிதிக் கட்டுப்பாட்டை முறையாகவும் பொறுப்புடனும் பேண வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.