
(எஸ்.அஷ்ரப்கான்,மு.அ. மு.சிஹாம்)
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட சதுரங்க போட்டிகளில் 17 வயதிற்கு கீழ் விளையாடி, நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று சம்பியனாக மகுடம் சூடியது.
திருகோணமலை
சிங்கள மத்திய மஹா வித்தியாலயத்தில் 25,26 ஆகிய தினங்களில் இடம்பெற்று முடிந்த மாகாண மட்ட சதுரங்க போட்டிகளில் மேற்படி சாதனை நிலைநாட்டப்பட்டது.
இதில் பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை,
ஸ்ரீ கோணஸ்வரா வித்தியாலயம், மட்- ஷென் மைக்கல் ஆகிய அணிகளை வென்று வரலாற்றில் தனது நாமத்தை பதித்துள்ளது.
இப்பாடசாலை சார்பில் பங்குபற்றிய வீரர்களான எம்.ஏ.எம்.ரெஸா, ஜே. ஹம்தி ஸனூஹ், ஏ. டப்ளியு.கே.ஆரிபீன், எஸ்.ஏ.ஆதில் கைஸ், எஸ்.எம்.அப்ராஸ், எம்.ஆர். இன்ஸமாம், ஐ.எம்.அஹ்கம் அலி, ஆகியோரில் போட் சம்பியன்களாக, எம்.ஏ.எம்.ரெஸா(போட் நம்பர் இரண்டு), ஏ. டப்ளியு.கே.ஆரிபீன் (போட் நம்பர் மூன்று),ஜே. ஹம்தி ஸனூஹ் (போட் நம்பர் நான்கு), எஸ்.ஏ.ஆதில் கைஸ் (போட் நம்பர் ஐந்து) ஆகிய நான்கு வீரர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பிரிவு, சதுரங்க பயிற்றுவிப்பாளர் டப்ளியு.நிஜாஸ் (Bsc) ஆகியோருக்கும், பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் பாடசாலையில் இடம்பெற்றது.