
தேசிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட நிவித்திகல உள்ளூராட்சி சபையில் வேட்பாளர் நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நிவித்திகல உள்ளூராட்சி சபையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிமல் அமரசிறி என்ற வேட்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி, நேற்றைய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று முற்பகல் 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.