
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளையுடன் (28) நிறைவடையவுள்ளது.
மேலும், இம்முறை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் பாடசாலையின் அதிபர் மூலமாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதளதின் மூலமாகவும் உரிய அறிவுறுத்தல்களின்படி தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இதன்படி, விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஊடாக அனுப்ப முடியும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலைப் பெற்று, தேவைப்படும் பட்சத்தில் சமர்பிப்பதற்காக அதைத் தங்கள் காவலில் வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.