
இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுங்கத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து சுங்க கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இனங்கண்டு, அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக்குழுவில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.