
அரிசி கொள்முதல் மற்றும் நெல் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்தோடு, அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புக்கான வியன்னா உடன்படிக்கை மற்றும் அணுசக்தி சேதங்களுக்கான கூடுதல் இழப்பீடு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாகும் முன்மொழிவுக்கும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.