
சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்படும் போது, வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேக்கு மரத்தை வெட்டிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, ஒரு ஈர்ப்பு இயந்திரம், நடமாடும் வெட்டும் இயந்திரம் மற்றும் 31 தேக்கு மரத்துண்டுகள் என்பன STF அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் 27 மற்றும் 57 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.