
06 மாதங்களில் மின்சார கட்டணம் 145 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்ளுர் வர்த்தக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளுர் வர்த்தக பாதுகாப்பு சபையின் தலைவர் மகேந்திர பெரேரா நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் , உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விற்பனையும் குறைந்துள்ளதாகவும், இதனால் கிட்டத்தட்ட 50 இலட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, அவர் கூறுகையில், மூன்று ஆண்டுகளாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.