
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துமாறு அமெரிக்கா செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இலங்கை மக்களின் குரலை நசுக்கும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என்றும் குழுவின் தலைவர் பொப் மெனண்டஸ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் சமகி ஜனபலவேக இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.