
பாகிஸ்தானின் 02 மாகாணங்களுக்கான தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண தேர்தல்கள் தொடர்பாக இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கல் மேலும் தெரிவிக்கின்றன.
அத்தோடு, பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அரசியலமைப்பின் முக்கிய அம்சமாகும், பாராளுமன்றம் அல்லது மாகாண சபைகள் இல்லாமல் பாராளுமன்ற ஜனநாயகம் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டு மாகாணங்களின் மாகாண சபைகள் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஜனவரி மாதம், இம்ரான் கான், முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு மாகாண ஆளுநர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், பாகிஸ்தான் பாரம்பரியமாக மாகாண மற்றும் பொதுத்தேர்தலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு பாகிஸ்தானின் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபையொன்று கலைக்கப்பட்ட பின்னர் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.