
அமெரிக்கா டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.
மேலும், நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 343.97 ரூபவாகவும் மற்றும் அதன் விற்பனை விலை 356.73 ரூபவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, நேற்று அமெரிக்கா டொலரின் கொள்முதல் விலையானது 351.72 ரூபவாகவும் மற்றும் அதன் விற்பனை விலையாக 362.95ரூபவாகவும் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக ஒரு திர்ஹாமின் விற்பனை விலை 96.28 ரூபவாக குறைந்துள்ள நிலையில் நேற்றைய திர்ஹாமின் விற்பனை விலை 97.59 ரூபவாக இருந்துள்ளது.
இதன்படி, இன்று சுவிஸ் பிராங்கின் விற்பனை விலை 380.82 ரூபவாக இருப்பதோடு நேற்றைய விற்பனை விலை 388.55 ரூபவாக இருந்துள்ளது.
அத்தோடு, பிரிட்டிஷ் பவுண்டின் இன்றைய விற்பனை விலை 429.32 ரூபவாகவும் அதன் நேற்று விற்பனை விலை 438.07 ரூபவாக இருந்துள்ளது.
மேலும், இன்று சிங்கப்பூர் டொலர் ஒன்றின் விற்பனை விலை 266.53 ரூபவாகவும் அதன் நேற்றைய விலை 270.63 ரூபவாக இருந்துள்ளது.
இதேவேளை, ஜப்பானிய யென் ஒன்றின் இன்றைய விற்பனை விலை ரூ.2.63 ரூபவாக பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய விலை 2.67 ரூபவாக இருந்துள்ளது.
அத்தோடு, யூரோ ஒன்றின் இன்றைய விற்பனை விலை 381.29 ரூபவாகவும் நேற்றைய விற்பனை விலை 385.92 ரூபவாக இருந்துள்ளது.