
சீனாவின் கிழக்குப் பகுதியில் பெண் ஒருவர் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கம்போடியா சிறுமி ஒருவர் பறவைக் காய்ச்சல் வைரஸால் இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனாவில் ஒரு பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கும் 53 வயதுடைய பெண் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த பெப்ரவரி மாதம், கோழிக்கறியை உட்கொண்ட பிறகு, ஜனவரி 31 அன்று அந்தப் பெண்ணுக்கு பறவை ஜாக்களினுடைய அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தற்போதைய நிலை குறித்து சரியான தகவல்கள் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, கம்போடியாவில் இருந்து பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மனித உயிரணுக்களைத் தாக்கும் அளவுக்கு வைரஸ் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளதோடு இந்த விடையம் மிகுந்த கவலையளிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த H5N1 பறவைக் காய்ச்சலினை ஏற்படுத்தும் வைரஸ் ஏற்கனவே பிறழ்வுக்குள்ளாகி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிப்பதோடு குறித்த பறவைக் காய்ச்சலினால் உயிரிழந்த சிறுமியினுடைய மரபணு வரிசைப் பரிசோதயைச் செய்த வைத்தியர் எரிக் கார்ல்சன், தெரிவிக்கையில் பெறப்படும் மரபணுவில் திரிபு நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த சிறுமிக்கு மனிதர்கள் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இது மனிதர்களுக்கு பரவுவது மிகவும் ஆபத்தான நிலையினை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.