
இந்தியாவில் இமயமலைக்கு அருகில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், இலங்கையில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கங்கள் ஏற்படுவதை கணிக்க முடியாது என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜானக அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.
சத்தத்தோடு,நிலநடுக்க அபாயத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்களை இலங்கை ஏற்கனவே தயாரித்துள்ளதாக புவியியல் ஆய்வுகள் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம மேலும் தெரிவித்துள்ளார்.