
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திருத்தப்பட்ட திகதியை அறிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடிய போதிலும், அந்த தீர்மானம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளருக்கும், நிதியமைச்சர் சார்பில் அட்டர்னி ஜெனரலுக்கும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், சமகி ஜனபலவேகவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குறித்த உத்தரவினை வழங்கியுள்ளது.