
அமெரிக்கா இதுவரை சந்தித்திராத வலுவான மற்றும் ஒழுக்கமான எதிரி சீனா என்று குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்காக ஆளும் ஜனநாயகக் கட்சியைக் குற்றம் சாட்டிய அவர், அமெரிக்கர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து சீனா உளவு பலூனைப் பார்ப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை என்று தெரிவிவித்துள்ளார்.
அத்தோடு, நட்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்காவில் தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய நாடுகளுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் எனவும் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காப் பெண் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.