
மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக மின்சார விநியோகம் தொடர்பான ஒதுக்கப்பட்ட வலயங்களில் தனியான கணக்குகள் மற்றும் செயற்பாடுகளை பேணுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மேலும், அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் மின்சார சபையின் உயர் நிர்வாக அதிகாரியுடனான கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளார்கள்.
இதன்படி, புதிய சட்ட வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மறுசீரமைப்பிற்கு அவசியமான மனித வள மேலாண்மை, சொத்து மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு தேவையான தணிக்கைகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவதற்கும் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் செலவைக் குறைப்பதற்கும் உதவும் முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.