
கண்டி பொலிஸார் மற்றும் உத்தியோகபூர்வ நாய் பிரிவு அதிகாரிகள் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அங்கு சந்தேகத்தின் பேரில் 6 பேரும் நான்கு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, சந்தேகநபர்கள் 26 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் ஹீரஸ்ஸகல, சுதுஹும்பொல, மஹையாவ, கண்டி மற்றும் திகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண் சந்தேகநபர்கள் 24 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டுகஸ்தோட்டை மற்றும் வைத்தியசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று (05) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.