
சீனா தனது பாதுகாப்பு செலவை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 7.1 சதவீதமாக இருந்த நாட்டின் பாதுகாப்பு செலவினத்தை, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 7.2 சதவீதமாக உயர்த்த சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அத்தோடு, சீனாவின் பாதுகாப்புச் செலவு சுமார் 225 பில்லியன் டொலர்களாக இருக்ப்பதோடு நேற்று தொடங்கிய சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த அமர்வில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சுமார் 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவின் பட்ஜெட் பற்றாக்குறை 2.8 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை விட அதிக சதவீதத்தை பாதுகாப்பு செலவினங்களுக்காக சீனா ஒதுக்குவதும் சிறப்பம்சமாகும்.
இதன்படி, சீனாவை அடக்கி, கட்டுப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இராணுவப் பயிற்சியும் தயாரிப்புகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று பதவி விலகும் சீனாப் பிரதமர் லீ கே குவான் அங்கு தெரிவித்துள்ளதோடு தைவானுடனான அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வரும் பின்னணியில் சீனா தனது பாதுகாப்பு செலவினங்களை மேலும் அதிகரித்துள்ளது.
அத்தோடு, சீனா அதிபர் ஜி ஜிங் பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பது உட்பட சீனா அரசியலில் பல முக்கிய முடிவுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு சீனா மக்கள் காங்கிரஸின் அமர்வு நடைபெறுகின்றது.
மேலும், சீனா அதிபரின் சமகால அரசியல் நண்பராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் லீ கே குவான் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் அத்துடன் சில அமைச்சரவை திருத்தங்களும் இந்த அமர்வில் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.