
துறைமுகம், எரிசக்தி, நீர்,மின்சாரம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தொழில் வல்லுநர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அநீதியான வரிகளை நீக்குவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தொழில்சார் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவே இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.