
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
மேலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்க செய்தியாளர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான், இந்த விவாதத்தில் நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.