
நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) முதல் தடவையாக 8 துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் கூடும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 8 குழுக்களின் தலைவர்கள் முதற்கட்ட கூட்டத்திலேயே நியமிக்கப்படுவார்கள் என கூறியுள்ள அவர், 4 குழுக்களின் தலைவர்கள் அரச தரப்பிலும், மற்ற 4 குழு தலைவர்கள் எதிர்கட்சியிலும் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 17 துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.