
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை வீழ்ச்சி காரணமாக கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ஒரு பவுன் தங்கத்தின் விலை 4,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 153,500 ரூபாவாகவும், 24 காரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 166,000 ரூபாவாகவும்உள்ளது.
இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 18,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, கடந்த வருடம் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்ததற்கு முன்னர் தங்கத்தின் விலையை ஒப்பிடுகையில் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.