
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கொள்கலனில் இருந்து கால்நடை தீவனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த நிறுவனத்திற்கு வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 07 கால்நடை தீவன கொள்கலன்களை சந்தேக நபர் திருடியுள்ளார்.
இதன்படி, கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து திருடப்பட்ட கால்நடை தீவனத்தின் அளவு 4,920 கிலோ என பொலிஸார் தெரிவித்த்துள்ளதோடு இதன் மதிப்பு சுமார் பதினான்கு லட்சத்து 76,000 ரூபாய் எனவும் குறித்த நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.