
நிதித்துறையில் ஏற்படும் நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கு நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட குழுவையும், நிதித்துறையில் ஏற்படும் நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பக் குழுவையும் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு மற்றும் அதற்காக செலவிடப்படும் பணத்தை உரிய திணைக்களங்களுக்கு ஒதுக்குவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் சபையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.