
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மிரிஹானவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தம்மை பொலிஸார் கைது செய்ததாக தெரிவித்து இரண்டு செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேலும், குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்ததை அடுத்து சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, குறித்த மனுக்களை தொடர முடியாது என தெரிவித்து பூர்வாங்க ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
இதன்படி, நான்கு வாரங்களுக்குள் இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை மீள்பரிசீலனை செய்வதற்காக ஜூலை 17ஆம் திகதி கூடுமாறு உத்தரவிட்டுள்ளது.