
ஏப்ரலில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மூலோபாயம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வரவிருக்கும் முன்னேற்ற மதிப்பாய்வுக்கு முன்னர், தனது வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர் மட்ட ஒப்பந்தத்தின் அறிவிப்பு, கடன் மறுசீரமைப்பிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும், நீண்ட கால அடிப்படையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான நடுத்தர கால கடன் தீர்வு இலக்குகளை வெளிப்படுத்துவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்த்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நிபந்தனைகளை இறுதி செய்வதற்கு முன்னர், இலங்கை தனது வர்த்தக கடன் வழங்குநர்களுடன் அவசரமாக கலந்துரையாடி அது தொடர்பான மூலோபாயத்தை அறிவிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக்கு முன்னர் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகள் அடுத்த 06 மாதங்களுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், பத்து வருட காலப்பகுதிக்குள் கடனை நிலைநிறுத்தக்கூடிய தன்மையை இலங்கை மீளப்பெற வேண்டும் எனவும், அதன் போது கடன் அளவைக் குறைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2029 ஆம் ஆண்டு வரை இலங்கை வருடாந்தம் சுமார் 6 பில்லியன் டொலர்களை கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார், ஆனால் கடன் மறுசீரமைப்பின் பின்னர் தொகை குறைக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கியும் படிப்படியாக வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரித்துள்ளடன் பயன்படுத்தக்கூடிய டொலர்கள் கடந்த மாத இறுதியில் சுமார் 600 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும் இலங்கையும் சீனாவுடன் $1.5 பில்லியன் இடமாற்று ஒப்பந்தத்தை கொண்டுள்ளதுடன் உள்நாட்டு இருப்புக்கள் மூன்று மாத இறக்குமதியை ஆதரித்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பணவீக்க விகிதம் மத்திய வங்கி முன்னர் கணித்ததை விட வேகமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் 07 தசாப்த கால வரலாற்றில் எதிர்நோக்கிய வலுவான நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா உட்பட அனைத்து முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இலங்கை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நான்கு வருட கால எல்லைக்கு உட்பட்டு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கான தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் இம்மாதம் 20ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.