
கொழும்பு பல்கலைக்கழகத்தை சுற்றி கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் களனி பல்கலைக்கழகத்தை சுற்றி நேற்று இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, போராட்டங்களை ஒடுக்க காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் எதிர்வரும் 13ஆம் திகதி தமது ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, போராட்டங்களை கட்டுப்படுத்த களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதாகவும் இதன் காரணமாக கொழும்பில் உள்ள பல பாடசாலைகளின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் நீ பல்கலைக்கழக அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.