
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் மாற்றியமைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பான அச்சுப் பணிகளுக்குத் தேவையான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், திறைசேரி செயலாளருக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததோடு அதன் நகல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 75 சதவீத தபால் ஓட்டுகள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பணிகளுக்காக 40 மில்லியன் ரூபா அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அரசாங்க அச்சகம் ஏற்கனவே சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியான பணிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பில் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தைத் தக்கவைத்துக்கொள்வதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.