
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பணம் தேடும் வழியொன்றை தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டார். தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் சம்பளத்தை 75 வீதத்தால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலுக்கு பணமில்லை என்ற கருத்து பொய்யானது என சமகிஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடியும் வரை அமுல்படுத்த வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பொதுத் தேர்தலுக்கு பணம் பெற்றுக் கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிதி அமைச்சருக்கு சமர்ப்பித்த கடிதத்தையும் சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.