
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பல கட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை 4 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகரிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராக மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் திங்கட்கிழமை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இன்று இடம்பெற்ற அவசர மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழில்சார் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.