
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரவு தம்புள்ளை நகர மையத்தில் மக்கள் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மின்கட்டண உயர்வை கண்டித்து தேசிய மக்கள் சக்தி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.