
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தெஹிவளை மாநகர சபையின் மேயர் உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மாவட்ட நீதிபதி, எதிர்வரும் 24ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.