
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கொள்கலனில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கோட்டை புகையிரத நிலையத்தின் 04 ஆவது நடைமேடையில் உள்ள கொள்கலனை சோதனையிட்ட போது சிசு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாகவும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.