
பாண் எடை மற்றும் தரம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு புதிய சட்டமூலம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே தயாராகி வருவதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், பாண் எடை மற்றும் தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட நாட்டில் சட்ட கட்டமைப்பு இல்லை என தெரிவிக்கப்படாமைக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சரியான எடை இல்லாத பாண்களை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால், எதிர்காலத்திலும் பாணின் விலை குறைக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.