
மேலும் 20 மில்லியன் ரூபா வழங்கினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட தொகை 533 மில்லியன் ரூபா எனவும் அரசாங்க அச்சகத்திற்கு ஏற்கனவே 40 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சுமார் 150 மில்லியன் ரூபா அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 17 மாவட்டங்கள் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் மொத்தத் தொகை மொத்த தபால் வாக்கு எண்ணிக்கையில் 75 சதவீதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளின் போது அரசாங்க அச்சகத்திற்கு பாதுகாப்பு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 4-5 நாட்களுக்குள் உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அச்சகத்திற்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு தரப்பினர் ஒப்புக்கொண்ட போதிலும், அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் தேவையான நிதி கிடைக்கவில்லை, எனவே அச்சுப் பணிகள் தாமதமாகின்றன என்று மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.