
மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்க அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.
மேலும், மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, வருடாந்த போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடனான கூட்டு உடன்படிக்கையில் 3 வருடங்களுக்கு ஒருமுறை 25 வீத சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.