
100 மில்லியன் ரூபாவை அடுத்த வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் அந்த தொகையாவது தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 1100 மில்லியன் ரூபா. முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்கக் கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளரும் இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை ஒன்றையொன்று மீறினால், கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் என்று பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.