
உக்ரைன் இராணுவத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரில் 24 மணி நேரத்தில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் கொல்லப்பட்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பாக்முட் நகரை கைப்பற்றும் நோக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டான்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் இராணுவம் அப்பகுதியை குறிவைத்து கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, உக்ரைன் தாக்குதலில் 500 ரஷ்யா வீரர்கள் நிச்சயம் கொல்லப்பட்டார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் உக்ரைன் தாக்குதலில் 221 ரஷ்யா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளதோடு உக்ரைன் தாக்குதலில் மேலும் 314 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.